கலவரம், கண்டதும் சுட உத்தரவு, ஊரடங்கு என பற்றி எரிந்து வருகிறது மணிப்பூர், இதற்கான காரணம் என்னவென விரிவாக பார்க்கலாம்…
மணிப்பூர் பழங்குடியின மக்கள்:
1950களில் இந்தியாவிடமிருந்து பிரிந்து செல்ல தீவிரமாக போராடிய மணிப்பூர். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தீவிரம் தணிந்து இன்று ஒற்றுமையுடன் இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக இது ஒரு போராட்ட பூமியாகவே இருந்து வருகிறது. இங்கு பரவலாக மெய்தி , குக்கி, நாகா ஆகிய மூன்று இன மக்கள் இருக்கிறார்கள்.
மெய்டெய் பழங்குடிகள் தங்களை அரசின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்த்து, எஸ்டி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த பிறகு வழக்கம் போல் தனது சித்துவேலைகளை காட்ட ஆரம்பித்தது.
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி:
குறிப்பாக, மெய்டெய் குடிகளை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று, கங்குகளைக் கிளறி விட்டது. அதைத் தொடர்ந்து, மலைவாழ் குகி மக்கள் வசிக்கும் சில பகுதிகளை ஆக்ரமிப்பு என்று கூறி அப்புறப் படுத்தும் வேலையை மணிப்பூர் பாஜக அரசு துவங்கியது. அவ்வளவுதான் கலவரம் மூண்டு விட்டது.
சாதாரணமாக இதைக் கவனித்தாலே இதில் செயல்பட்டுள்ள பிரித்தாளும் சூழ்ச்சி நன்கு விளங்கும்.சமூகங்களை மோதவிட்டு ஆதாயம் தேடுவது பாஜகவுக்கு கைவந்த கலை.2022 தேர்தலில் பாஜக 32 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகள் சிதறடிக்கப்பட்டு விட்டன.
இப்போது மணிப்பூரின் பெரும்பான்மைவாத மெய்டெய் சமூக அரசியலை பாஜக ஊக்குவிக்கிறது. மெய்டெய் வெர்சஸ் நாகா, குகி மலைவாழ் பழங்குடிகள் எனும் இந்த மோதலின் இறுதியில், மலை வளங்கள் யாவும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு சுரண்டப் படுவதுதான் நடக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
பாஜகவால் பற்றி எரியும் மணிப்பூர்:
மாநிலத்தில் பாஜகவை நுழைய விட்டதற்கு மிகப்பெரிய விலையை மணிப்பூர் கொடுத்துக் கொண்டுள்ளது. கிளறி விடப்பட்டுள்ள சமூக மோதல்கள் தணிந்து மணிப்பூரில் அமைதி திரும்புவது அத்தனை எளிமையாய் இருக்கப் போவதில்லை.
தமிழகத்தில், திராவிடத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று உழைத்துக் கொண்டுள்ள சக்திகளை BJP தூண்டி விடுவது மற்றொரு குஜராத்/உபி/ மணிப்பூர் அரசியல் தான். இதற்கு, திராவிட மாடலின் சறுக்கல்களும் உதவுகின்றன என்பது மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் பாஜக , அதிமுக, நாதக, அமமுக, பிற ஹிந்து அடிப்படைவாத அமைப்புகள் என பலவும் சுறுசுறுப்பாக திராவிட மாடலை அரித்துக் கொண்டுள்ளன. இறுதியில் இவை யாவும் சிதறடிக்கப் பட்டு பாஜக ஒற்றையாய் வலிமை பெறும்.
தமிழ்நாட்டில் மெதுவாக அதை நோக்கித்தான் பாஜக உழைக்கிறது.
கேரளத்தில் முயற்சிகள் தொடங்கி விட்டது , வங்காளம் ஏற்கனவே பாஜகவை அரவணைத்து விட்டது. 2024ல் மீண்டும் வெற்றி பெற்றால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

















