அனுமதி பெறாமல் பிரியாணி போட்டி.. மேலாளர் மீது வழக்கு..!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் கோவையில் ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் ஹோட்டல் ஒன்றை நேற்று முன் தினம் திறந்தார்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தின் விளம்பரத்திற்காக அன்று மதியம் போட்டி ஒன்று நடத்தபட்டுள்ளது. அதாவது அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடும் நபர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகையும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரமும் 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்காரணமாக கோவை மற்றும் கேரளாவில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் அந்த உணவகத்திற்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கோவை ரயில் நிலையம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்தநிலையில் பிரியாணி சாப்பிடும் போட்டி என்ற பெயரில் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் அரசு மருத்துவமணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவை இணைக்ககூடிய முக்கியமான சாலையில் பொது மக்களை கூட்டி போக்குவரத்திற்கு இடையூறு அளித்திற்காக காவல் ஆய்வாளர் அர்ஜூன் குமாரின் புகரின் பேரில் உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்