பிக் பாஸ்.. அடுத்த நாயகன் இவரா..?
கமல் விலகல்:
தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வந்த பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவனத்தையும் பெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 7 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் .
இந்த நிலையில் திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி உள்ளதாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
கமல்ஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளதால் ஷோவில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தொகுப்பாளர்:
இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு பதிலாக யார் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதில் நடிகர் சிம்பு, சூர்யா, சரத்குமார், அர்ஜுன், அரவிந்த்சாமி, நயந்தாரா போன்ற பிரபலங்களிம் பெயர் அடிப்பட்ட நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி காட்டு தீயாய் பரவி வருகிறது.
கமலுக்கு பதில் சிவகார்த்திகேயன்:
அதாவது கமல்ஹாசன் தனக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயனை தான் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொள்வதற்கு ரெக்கமண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படம் தற்போது ரீலிஸ்க்கு தயாராகி உள்ள நிலையில் அவர் இந்த நிகழ்ச்சி நடத்தினால் அது படத்தின் ப்ரமோசனாக அமையும் என்பதால் சிவகார்த்திகேயனை கமல் ரெக்கமண்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க சில் மாதங்களே உள்ளதால் விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அந்த தொலைக்காட்சியில் தான் முதல்முதலாக தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்