மதுரை ரயில் தீவிபத்து குறித்து இரயில்வே துறை எடுத்த அதிரடி முடிவு..!!
ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரயில்வே துறையின் பொது மேலாளர் பேட்டி.
மதுரை ரயில் விபத்தில் காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆர் என் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவிலில் சுவாமி தரிசனம் முடித்து நாகர்கோவிலில் இருந்து இன்று அதி காலை 4:30 மணி அளவில் ரயில் மதுரை ரயில் நிலையம் வந்தனர்.
இதனையடுத்து 1 கிலோமீட்டர் தொலைவில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாலையில் டீ போடுவதற்காக கேஸ் பற்ற வைத்த போது அதை வெடித்து இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவரது உடல்கள் இன்றே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைபதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்.
இறந்தவர்களின் உடல்கள் விமான மூலம் அவர்களின் சொந்த ஊரான லக்னோவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து தொடர்பாக இந்திய தண்டை சட்டப்படியும், ரயில்வே துறையின் சட்டப்படியும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வு ஒரு மோசமான நிகழ்வு என்றும் இந்த நிகழ்விற்கு காரணமான தவறு விளைத்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
Discussion about this post