பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி – வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் இன்று மே20 முதல் மீண்டும் துவங்குகிறது. Beating Retreat Ceremony at Attari-Wagah
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி – வாகா எல்லை மூடப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. Beating Retreat Ceremony at Attari-Wagah
இதனை தொடர்ந்து நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் தினமும், அட்டாரி – வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
12 நாட்கள் கழித்து, பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் கைகுலுக்க மாட்டார்கள்.
1959ம் ஆண்டு முதல் எல்லையில் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் மே 8ல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 12 நாட்களுக்கு பின்னர் இன்று மே20 முதல் மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.