விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் மாதம் ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இப்படத்தின் முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடலும், 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா…’ என்ற பாடலும் வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.