கோவையில் மெட்ரோ.. ஆய்வு பணியில் அதிகாரிகள்..
சென்னைக்கு அடுத்த பெருநகரங்களில் முதன்மையானது கோயம்புத்தூர். லட்சக்கணக்கான மக்கள் வாழும் கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை இருக்கின்றன .
இந்த நிலையை போக்குவதற்காக மெட்ரோ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இதற்கான மெட்ரோ கட்டுமான பணிகளின் குறித்தான ஆய்வு நடைபெற்றது. பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், திட்ட இயக்குனர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியு, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொது மேலாளர் ரேகா ஆகியோர் உக்கடம் பேருந்து நிலையம் முன்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
உக்கடம்மார்மகா ஆரம்பிக்கும் ஒரு முனையம் ராம் நகர், காந்திபுரம், கணபதி, அத்திப்பாளையம் ஜங்ஷன், விநாயகபுரம், சித்ரா, சரவணம்பட்டி, விசுவாசபுரம், விஜிபி நகர், சத்தியமங்கலம் சாலையில் 14.4 கி.மீ. செல்கிறது.
அதேபோல கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குப்புசாமி மருத்துவமனை, லட்சுமி மில், நவ இந்தியா, பீளமேடு, ரிபப்ளிக் மால், ஹோப் காலேஜ், கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ், எம்.ஜி.ஆர் நகர், வெங்கடாபுரம், பார்க்பிளாசா, நீலாம்பூர் ஸ்டேஷன் , அவிநாசி சாலை வழியாக 20.4 கி.மீ. செல்கிறது.
மெட்ரோ மேம்பால பணிகளுக்கான உத்தேச திட்ட மதிப்பு 10740 கோடி. நெருக்கடியில் இருக்கும் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வுகள் ஏற்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
-பவானி கார்த்திக்