சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..! 4 வது குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார்., சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 12ம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தது.
அதை தொடர்ந்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்து ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இவ்வழக்கை ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அப்போது தமிழக அரசின் சார்பில், “குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த சவுக்கு சங்கர், சட்ட ஒழுங்குக்கு எதிராக செயல்பட்டுள்ளார். பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறு பேச்சு. மாநில அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக பேசிய வழக்கு உட்பட அவர் மீது நான்கு வழக்குகள் உள்ளதால், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதியப்பட்டது.
எனவே சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. சவுக்கு தரப்பில், “பல வழக்குகள் இருந்தாலும், குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு” என்று கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சங்கர் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாதது. இருந்தாலும் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியுமா..? முடியாதா..? என்பதை ஆராய வேண்டும். எனவே இவ்வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மூன்றாவதாக தற்போது இன்று கோவை சைபர் குற்றப்பிரிவு வழக்கில் நிபந்ததனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்த நிலையில், அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் என்ன நிபந்தனை என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.. பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதால் மற்ற வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தால் தான் சவுக்கு சங்கர் வெளியே வர முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உள்ளது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு என்பதால் நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விலகி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..