குழந்தையும் குளியலும் – வாரத்திற்க்கு எத்தனை முறை..?
குழந்தை பிறந்ததும் அவர்களை பராமரிக்கும் பொறுப்பு தாய்க்கு மட்டுமின்றி, சுற்றி இருக்கும் உறவினர்களுக்கும் இருக்கும்.
குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பல சந்தேகங்கள், தாயிற்கு இருக்கும். அதில் ஒன்று தான், வாரத்தில் எத்தனை முறை குழந்தையை தலைக்கு குளிப்பாட்டலாம்? கோடைக்காலத்தில் வெந்நீர் பயன் படுத்தலாமா என்று, நாம் அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்கிறார். மருத்துவர் பூர்ணிமா.
பிறந்த குழந்தையை வாரத்தில் மூன்று முறையாவது தலைக்கு குளிப்பாட்டி விட வேண்டும். உடலுக்கு தண்ணீர் ஊற்றும் பொழுது கூட 5 நிமிடத்திற்கு மேல் குளிக்கவைக்க கூடாது.
குழந்தைகளை அதிக நேரம் குளிக்கவைத்தால், நீண்ட நேரம் தூங்குவார்கள் என நினைத்து சிலர் குழந்தைகள் அதிக நேரம் குளிக்க வைப்பார்கள் அது தவறு.
குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும். சோப்பு மற்றும் ஷாம்பூகளை மட்டும் தான் பயன் படுத்த வேண்டும். பிற சோப்புகளை பயன் படுத்தினால் சருமம் பாதிக்கப்படும்.
குழந்தைகளை குளிக்க வைக்க பெரும்பாலும் சுடு நீரை தான் உபயோகிக்கின்றனர். அந்த தண்ணீர் சற்று வெது வெதுவென இருந்தால் போதும். அந்த சூடு குழந்தையின் சருமத்தை ஏற்கும் அளவில் இருக்க வேண்டும்.
குழந்தையை குளிக்க வைக்கும் முன், அம்மாக்கள் தண்ணீரில் கைவைத்து சூட்டின் அளவை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். மிக சூடான தண்ணீரை குழந்தையின் மேல் ஊற்றினால் விரைவில் தோல் பாதித்து விடும். அவர்கள் ஏற்க கூடிய அளவிற்கு இருந்தால் போதும். என அறிவுறுத்தினார், மருத்துவர் பூர்ணிமா.