அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அறிவிப்பு..!!
அடுத்தாண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2020 ஆகஸ்ட் 5ம் தேதியன்று பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து ராமர் கோயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிந்து, 2024 ஜனவரியில் ராமர் சிலை நிறுவப்பட்டு, அதனை தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அலுவலர்கள், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரம்மாண்ட ராமர் கோயிலை திறந்துவைக்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Discussion about this post