அய்யோ செம க்யூட்.. அஜித்தின் இளமையான லுக்.. விடமுயற்சியின் புதிய போஸ்டர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இதில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது அஜித்குமார் மற்றும் த்ரிஷா ஜோடியாக இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இருவரின் காம்பினேஷனில் ஜி, கீரிடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்கள் வெளி வந்துள்ளன. அந்த படங்களில் இருவரின் ஜோடி கலக்கலாக இருக்கும். அதேபோல் இப்படமும் அமையுமா என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், செக்ண்ட் லுக்கில் இரு போஸ்டர்களை ஜூலை 7 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் ஆரவ்விற்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அஜித்குமார் தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், இம்முறை விடாமுயற்சி தாமதமாவதால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது.
-பவானி கார்த்திக்