குரூப் 2 மற்றும் 2 A தேர்வு எழுதுபவரா நீங்க.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. அதுவும் இந்த மணி வரை மட்டும் தானா..!
தமிழக அரசு துறைகளில் குரூப் 2 மற்றும் 2A நிலையில் உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஜூலை 19) கடைசி நாளாகும்.
தமிழக அரசு பணிகளில் குரூப் 2 நிலையில் உள்ள வணிகவரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், சென்னை காவல் சிறப்பு பிரிவு அதிகாரி, வனத்துறை உள்ளிட்ட 13 துறைகளில் காலியாக உள்ள 507 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஜூன் இருபதாம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதே போல் குரூப் 2 A எனப்படும் கூட்டுறவு ஆய்வாளர், இந்து சமய அறந்தலையத்துறை கணக்கு ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 48 பதவிகளில் காலியாக உள்ள 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பும் அன்றே வெளியிடப்பட்டது.
இரு நிலைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க இன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பத்தின் மீதான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 14ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்