மயிலாடுதுறை – “என் குப்பை எனது பொறுப்பு”
மயிலாடுதுறை நகராட்சியில் “என் குப்பை எனது பொறுப்பு” எனும் தலைப்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை நகராட்சி 3 வது வார்டு அம்பேத்கர் நகரில், என் குப்பை எனது பொறுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் குறித்து நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், டெங்கு கொசுக்கள், புழுக்கள் வளராமல் இருக்க சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது குறித்து எடுத்து கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்கும் குப்பை மக்கா குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து துப்பரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் மற்றும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)