சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.112 உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,945க்கும், ஒரு சவரன் ரூ. 47,560 க்கும் விற்பனையாகியது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.0.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.