கையும் களவுமாக சிக்கிய அராங்க அதிகாரி..!! அப்படி என்ன பண்ணாங்க..?
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, வரி வசூலிப்பாளர் ரேணுகா கைது.
மதுராந்தோட்டத் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி அலுவலராக பணிபுரிந்த வருபவர் ரேணுகா. காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் தனக்கு சொந்தமான 460சதர அடி இடத்தை தனது மகன்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் ரேணுகா பெயர் மாற்றம் செய்ய சுந்தரிடம் 15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுந்தர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். ஆலடி தோப்புத் தெரு பகுதியில் கணக்கெடுப்பு பகுதியில் ஈடுபட்டிருந்த ரேணுகாவிடம் லஞ்ச பணம் 10 ஆயிரம் அளிக்கும் போது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேணுகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பில் கலெக்டர் ரேணுகாவை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..