கர்பிணி பெண்கள் கவனத்திற்கு..! கோடை வெயிலில் நீங்கள்.
சாதாரண மனிதர்களே வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்வது கடினம். அதிலும் கர்பிணிகள் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த உயிருக்குள் இன்னொரு உயிர் இருக்கிறது என்பதால்.
அப்படி இந்த கர்ப்பகாலத்தில் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய சிலவற்றை பார்ப்போம்.
தண்ணீர் : கர்ப்பகாலத்தில், கர்பிணி பெண்களுக்கு உடலில் உள்ள நீர் வியர்வை மூலம் வெளியேறி விடும். எனவே, இந்த நேரத்தில் அதிக தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது.
குறிப்பாக சில கர்பிணி பெண்கள் வேலைக்கு செல்வார்கள், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது. தண்ணீர் எடுத்துக்கொள்வது உடலுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் சிறந்தது.
சன் லோஷன் : சில கர்பிணி பெண்கள், வெயிலில் செல்லும் பொழுது முகம் கருக்காமல் இருக்க. லோஷன், சன்ஸ்கிரீன் பயன் படுத்துகின்றனர். அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் குறைந்த பட்சத்தில் SPF 30, ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீனை பயன் படுத்தலாம்.
ஆடைகள் : இந்த சமயத்தில் பருத்தி அல்லது கைத்தறி போன்ற காற்றோட்டமான ஆடைகளை உடுத்தலாம்.
உடற்பயிற்சி : கர்ப்பகாலத்தில் செய்யும் உடற்பயிற்சி மிக அவசியமாக இருந்தாலும். அதை மிக கவனத்துடன் செய்ய வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- உணவுகள் : கர்பிணி பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவு தான். கோடைகாலம் என்பதால் நீர்ச்சத்து நிறைந்த, பழங்கள், காய்கறிகள், அதிகம் கிடைக்கும். ஊட்டச்சத்து அதிகம் அளிக்க கூடிய பழங்கள் எடுத்துக் கொள்வது. ஆரோக்கியமான ஒன்று.
சாதரணமாகவே கர்ப காலத்தில், கர்பிணி பெண்கள் சோர்வுடன் இருப்பார்கள். அதுவும் கோடை என்றால் வெயில் தாக்கத்தை எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். அதிகம் வேலை செய்வதை குறைத்து கொண்டு. ஓய்வு எடுப்பது சிறந்தது.