கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு..!! கருகலைப்பிற்கு உங்களின் மனகவலையே காரணமாகிறது..!!
திருமணம் ஆனா அனைத்து பெண்களுக்கும் குழந்தை பிறக்க ஆசை படுவார்கள். எனவே திருமணத்திற்கு பின் கருவுற்றதும்.., பெண் மட்டுமல்ல அவளை சுற்றி உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் அந்த காலகட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? என்ன வகையான உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும் என்ற கவலை அனைவருக்கும் இருக்கும்..
கர்பமான பெண்களை மிகவும் சந்தோசமாக வைத்துகொள்ள வேண்டும் என்று சொல்லவாதற்கான காரணம்.., அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினால் தான்.
இந்த பிரச்னை அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை, பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் இது ஏற்படும்.
ஹார்மோன் சுரப்பி மாற்றம் நிகழ்வதால் இந்த பிரச்னை ஏற்படும். இதனால் கார்டிசோல் ஹார்மோன் அதிகம் சுருக்கப்பட்டு அதிக மனஅழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சில பெண்களுக்கு தூக்கமின்மை மற்றும் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளா விட்டாலும், மனஅழுத்தம் ஏற்படும்.
கார்பகாலத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை சாதாரணம் என்று எடுத்து கொண்டால், அதன் பின் விளைவாக தாய் செய் இருவருக்கும் பாதிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் அதிகமானால் கருவுற்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் குறையும், ரத்த நாளங்கள் சுருங்கும்.
இதனால் குழந்தைக்கு செல்ல வேண்டிய ரத்த நாளங்களும், ரத்த ஓட்டமும் சுருங்கும், எனவே குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சரியான சத்து கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே கருக்கலைப்பு நிகழ்கிறது. ஒரு சிலருக்கு குறை பிரசவம் ஆவதற்கும் இதுதான் காரணம்.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அடிக்கடி கோபப்படுவது, சோகமாக இருப்பது, அழுவது போன்ற மாற்றங்கள் இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால். தாய் சேய் நலமாக இருப்பார்கள்.
மேலும் தாயிக்கு சுக பிரசவமும் ஆகும்.., என்றார் மகப்பேறு மருத்துவர் ” நந்தினி ஏழுமலை”.
– வெ.லோகேஸ்வரி