திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! மீண்டும் மீண்டும் அதிர்ச்சி..!!
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி திருப்பதி அலிபிரி மலைப்பகுதியில் பாத யாத்திரை சென்ற 6 வயது குழந்தையை சிறுத்தை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதியில் இருக்கும் சிறுத்தைகள் திருப்பதிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி கொலை செய்வதாகவும்.., அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருப்பதாக.., திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
அலிப்பிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் வாகனங்கள் அதிகம் இயக்கப்படுகிறது.., குறிப்பிட்ட இந்த மூன்று இடத்தில் மட்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் பல பக்தர்களுக்கு அதுக்கு பலியாவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் வேதனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி மலைப்பகுதி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி ஒரு சிறுத்தையும், ஆகஸ்ட் 14ம் தேதி ஒரு பெண் சிறுத்தையும்.., ஆகஸ்ட் 17ம் தேதி இரவு ஒரு சிறுத்தையையும் வனத்துறையினர் பிடித்தனர்.
மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் இன்னும் ஒரு சிறுத்தை மட்டும் சிக்காமல் இருந்து வந்தது.., அதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டனர்., இந்த ஒரு சிறுத்தை மட்டும் இரவில் நடமாடுவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது..
மீண்டும் ஒரு சிறுத்தை பிடிப்பு :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் பாதையாத்திரை செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தையை வனத்துறையினர் இன்று அதிகாலை பிடித்துள்ளனர்.
பிடிபட்ட சிறுத்தையை, வனத்துறை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, அதை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பதி பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும்.., முக்கியமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால்.., பக்தர்கள் இரவு பயணத்தை அலிப்பிரி பகுதியில் தவிர்க்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post