நாகை மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடதப்பட்டத்தையடுத்து ஆந்திர துணை முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஃபைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு அதிவேக படகில் வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறித்து சென்று விட்டனர். அதே போல, செரூதுரை சேர்ந்த மீனவர்களையும் தாக்கி பொருட்க்ளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி , தனித் தனி 5 சம்பவங்களில் 24 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, நாகை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்களின் செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தயுள்ளது.
இதையடுத்து,. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சுமுகமான தீர்வு காறணும்படி வேண்டுகோள் விடுத்தார்.இந்த பிரச்னையை தீர்க்க இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஆக்கபூர்வமானபேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் ‘என்றும் அவர் தெரிவித்துள்ளார்.