ராமநாதபுரத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்து கொண்டிருக்கும் வேலையில் இந்த மாவட்ட தலைவரை படுகொலை செய்ய சென்னையில் இருந்து கூலி படைகளை ஏவிய இருப்பதை அறிந்து ஒட்டு மொத்த தமிழ் சமூகமே அதிர்ந்து போனது.
விசாரணையில் பிடிப்பட்ட இரண்டு கூலிப்படையினர் சென்னையை சேர்ந்த மோகன் ( 35) மற்றும் சுரேஷ் (35) என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆனால் இந்த படுபாதக சம்பவத்தை நிறைவேற்ற இராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் இடையேயான கோஷ்டி பூசல் தான் காரணம் என்பதே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலை முயற்சிக்கு காரணமாக முன்னாள் பாஜகவின் மாவட்ட தலைவர் கதிரவன் அணியினர் தான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏனெனில் புதிய மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட தரணி முருகேசன் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி தான் இந்த சதி செயலுக்கு காரணமாக அமைந்தது என்று முதற் கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாஜகவின் மாநில தலைவர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவிக்கையில் இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கருத்து வேறுபாடுகள் எல்லா கட்சிகளிலும் இருக்கும்.ஆனால் கூலி படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் பாஜகவில் இல்லை. தற்போது நடந்துள்ளது.இது தொடர்புடைய பாஜகவினர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.