70 வயதிலும் 20 வயதை போல உணருகிறேன் முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 70 வயதிலும் 20 வயதை போல உணருகிறேன். திமுக இளைஞரணி கூட்டத்திற்கு வரும்பொழுது எல்லாம் இளமையாக உணருகிறேன். சொந்த ஊரில் கால் வைக்கும் பொழுது ஏற்படும் புத்துணர்ச்சி திமுக இளைஞரணி கூட்டத்தில் கால் வைக்கும் பொழுது ஏற்படுகிறது.
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி மகத்தான சாதனைகள் செய்து வருகிறார். உதயநிதி காட்டிய ஒற்றை செங்கலை நினைத்து இன்று வரை புலம்பி கொண்டு இருக்கின்றனர். உதயநிதி மெரினாவில் மாற்று திறனாளிகளுக்காக சிறப்பு பாதையை திறந்து வைத்திருக்கிறார்.
திராவிட அணி கொள்கைகளை இளைஞ்சர் அணியினர் தெரிந்து இருக்க வேண்டும். நம்முடைய எதிரி எந்த ஆயுதத்தை எடுத்து இருக்கிறார்களோ நாமும் அதே ஆயுதத்தை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என திமுக இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.