ADVERTISEMENT
“சொந்த செலவில் சமையலறை மற்றும் விழா மேடை அமைத்து கொடுத்தார்-மதிமுக நாகராஜ்”
திருப்பூர் மாவட்டம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு மதிமுக மாமன்ற உறுப்பினர் நாகராஜ் தனது சொந்த செலவில் சமையலறை மற்றும் விழா மேடை அமைத்து கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட EB காலணியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முறையான விழா மேடை மற்றும் சமையல் கூடம் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், 24வது வார்டு மாமன்ற உறுப்பினருமான அரிமா.ஆர்.நாகராஜ் தனது சொந்த செலவில் பள்ளிக்கு விழா மேடை மற்றும் சத்துணவு சமையல் கூடத்தினை 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் தனது சொந்த செலவில் கட்டி கொடுத்துள்ளார். இதனை மாநகராட்சி தினேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர்.
பாலசுப்பிரமணியம் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளும் அரசு அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.