மயிலாடுதுறையில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் திருக்களாச்சேரி ஊராட்சியில் உள்ள பெரிய கூத்தூர் கிராமத்தில், 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
செம்பனார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதேபோல் செம்பனார்கோவில் ஒன்றியம் ஈச்சங்குடி ஊராட்சியில் கடலி கிராமத்தில் புதிய தரை மேல் நீர்த்தேக்க தொட்டியை 5 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிவேத முருகன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.