ஐந்து மாநிலங்களின் சட்டபேரவை தேர்தல் தேதி வெளியீடு..!! தேர்தல் ஆணையம் வைத்துள்ள ட்விஸ்ட்..!!
தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும். மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது…
இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும் : இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..