தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை எஸ்.டீ. சமூகத்துடன் இணைக்க வேண்டும் என்று பிரதமற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை முதல்வர் ஸ்டாலின் ட்விட்டேர் மூலம் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.
I've already written to Hon @PMOIndia for the inclusion of Narikurava & Kuruvikkara communities in ST list.
Welcome the significant passage of the Bill for the same in LS as a result of our consistent efforts.
1/2 pic.twitter.com/HyME8qd7hn
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 16, 2022
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தை சேர்ந்த மக்களை எஸ்.டீ. பிரிவில் இணைக்க மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று பிரதமற்கு கடிதம் எழுதிருந்தேன், எங்களுடைய தொடர் முயற்ச்சியை அடுத்து மக்களவையில் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றபட்டுள்ளதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் அவரின் பதிவில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினை சேர்ந்த மக்களின் கண்ணியமான வாழ்க்கைகாக அணைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அந்த பதிவின் தெரிவித்துள்ளார்.