கலைஞர் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!! முதலமைச்சரின் அமைதி பேரணி..!!
மறைந்த முன்னால் தலைவர் முத்தமிழ் அறிஞ்சர் மு.கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நாளில் முதல்வர் ஸ்டாலின் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும், எம்.எல்.ஏ களும் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரில் உள்ள அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வரைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அமைதி பேரணி சென்றுள்ளனர்.
இந்த பேரணியின் முடிவில் கலைஞரின் நினைவிடத்தில் வண்ண பூக்கள் கொண்டு அலங்கரித்து மற்றும் அவரின் 5 ஆண்டு நினைவு பற்றி வண்ண பூக்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்த அமைதி பேரணியில் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு என அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.