கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு..! 10 லட்சம் வருகையாளர்கள்..! நெகிழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்..!
கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான வாசிப்பு போட்டிகள், விளையாட்டுப் பயிற்சிகள், பெரியோர்களுக்கான கலந்துரையாடல், பேச்சுப்போட்டி-கட்டுரை போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 10 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது..
மதுரையில் உள்ள #கலைஞர்நூற்றாண்டுநூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது!
‘அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும்… https://t.co/WJDechk1Tu pic.twitter.com/0P8fVJP4o0
— M.K.Stalin (@mkstalin) July 31, 2024
மதுரையில் உள்ள #கலைஞர் நூற்றாண்டு நூலகம் இத்தனை குறுகிய காலத்திற்குள் பத்து இலட்சம் வருகையாளர்களைக் கடந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது!
“அறிவிற்சிறந்த தமிழர் என உயர்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போல், அடுத்து திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன.
அறிவுத்தாகம் கொண்டோரது தாகத்தைத் தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரது சிந்தனையையும் வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்.. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..