அரியலூர் 3 லட்சம் மதிப்புள்ள லாரி டயர்களை திருடியவர் கைது..!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனியார் லாரி டிரான்ஸ் போர்ட்டில் கடந்த 4 மாதங்களாக மதுரை மேலூரைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான பல்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
கடந்த 08ம் தேதி அன்று கும்பகோணத்தில் லோடு இறக்கி விட்டு லாரியை அரியலூர் தனியார் சிமெண்ட் பேக்டரிக்கு எடுத்துச் செல்வதாக தகவல் சொன்னவர் சிறிது நேரத்தில் பல்கர் லாரியின் GPS சிக்னலை ஆப் செய்துள்ளார்.
நிறுவனத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது போனை எடுக்கவில்லை. லாரியை ராம்கோ சிமெண்ட் நிறுவனம் அருகே நிறுத்தி விட்டு தலைமறைவாகி இருக்கிறார். இதனால் சந்தேகம் ஏற்பட்டு நேரில் வந்து பார்த்த போது பல்கர் லாரியின் டயர்கள் மாற்றப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூபாய் 3,00,000 இருக்கும்.
எனவே அந்த டிரான்ஸ் போர்ட்டின் கிளை மேலாளர் பாலமுருகன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் மதுரை மேலூருக்குச் சென்று, தலைமறைவாகியிருந்த காஞ்சிவனத்தை கைது செய்து அவரிடமிருந்து 8 லாரி டயர்களை கைப்பற்றினர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அரியலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post