சுயநினைவின்றி படுக்கை அறையில் ராணுவ வீரர்.. மனைவியிடம் நடந்திய விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் 38,. இந்திய ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி லீமா ரோஸ்மேரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
லீமா ரோஸ்மேரி சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்களது மகளை திருச்சியில் உள்ள பாட்டி படிக்க வைத்து வளர்த்து வருகிறார்கள்.
இதனால் வேளாங்கண்ணி தாஸ், அவரது மனைவி லீமா ரோஸ்மேரி இருவர் மட்டும் ஆவடியில் வசித்து வரும் நிலையில் கடந்த மே 10ம் தேதி இரவு, வேளாங்கண்ணி தாஸ் அதீத மது போதையில் வந்த அவர் காலை சுயநினைவின்றி படுக்கை அறையில் படுத்திருந்தார்.
இதனை கண்ட அவரது மனைவி லீமா ரோஸ் மேரி, அவரை மீட்டு, ஆவடி ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை வேளாங்கண்ணி தாஸ் அனுப்பி வைத்தனர்.
அவர் இறந்த காரணத்திற்காக காத்திருந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் லீமா ரோஸ் மேரியின் நாடகம் அம்பலமானது.
அதாவது அந்த அறிக்கையில் வேளாங்கண்ணி தாஸ் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அவரது மனைவி லீமா ரோஸ் மேரி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் என் கணவர், தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து, என்னிடம் தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த நான், சம்பவ தினத்தன்று மது போதையில் படுத்திருந்த அவரை, கொலை செய்தாக கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார்,வழக்கு பதிவு செய்து லீமா ரோஸ் மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்