ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கும்..! என்கவுண்டரில் சுடப்பட்ட திருவெங்கடம்..! கிடைத்த போலி இறப்பு சான்றிதழ்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் வெட்டி கொலை செயப்பட்டார். அந்த வழக்கில் பொன்னை பாலு, உட்பட அஞ்சலை, வழக்கறிஞர் ஹரிஹரன் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 11 ஆவது குற்றவாளியாக சரணடைந்த திருவேங்கடம் மாதவரம் பகுதியில் ஆயுதங்களை எடுத்து கொடுப்பதற்காக அழைத்து சென்ற போது காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
மேலும் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவெங்கடம் வேலூர் மாவட்டம் பொன்னை அருகேயுள்ள காட்பாடி தாலுக்கா கட்டுபாட்டில் உள்ள கீரைசாத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும். அவரது தந்தை கண்ணன் மற்றும் திருவேங்கடம் மனைவி மலர் இவர்கள் சென்னைக்கு வந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதும் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சுட்டு கொல்லபட்ட திருவெங்கடம் யார் என கேள்விகுறியாகி உள்ளது..? காரணம் பொன்னை கீரைசாத்து திருவேங்கடம் உடல் நலக்குறைவால் கடந்த 29-9-2023 அன்று இவர் இறந்து போனதகவும்., அவரது மனைவி மலர் கடந்த 10 மாதத்திற்கு முன்பு இறந்து போனதாக இறப்பு சான்றிதழ்களும் பெறப்பட்ட நிலையில் திருவெங்கடம் எப்படி சென்னையில் சுற்றி திரிந்தார் என்றும் இறப்பு சான்றிதழ்கள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உண்மையான கீரைசாத்து திருவேங்கடத்தின் குடும்பத்தினர் தற்போது அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இதனால் இறந்த திருவேங்கடத்தின் மனைவி மலர் பொன்னை காவல்நிலையத்தில் எங்கள் முகவரியை தவறாக யாரோ பயன்படுத்தியுள்ளதாகவும் இந்த திருவெங்கடத்திற்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது எனவும் இந்த நிலையில் இது ஒரு தொடர்கதை கொலைகளாகும் என அச்சத்தால் தங்களின் குடும்பத்தினருக்கும் உறுப்பினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
ஆனால் பொன்னை காவல்துறை புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதுகுறித்து திருவேங்கடம் மனைவி கூறுவதாவது யாரோ ஒரு கும்பல் கொலை செய்ததற்கு தாங்கள் குடும்பம் பழிவாங்குவது தவறு என கேட்டுள்ளார்.
அதற்கு போலீஸ் தரப்பில் காவல்துறை சுட்டுகொன்ற திருவெங்கடம் யார்..? அவர் மனைவி பெயரும் மலராக எப்படி இருக்க முடியும். குற்றப்பின்னனி உள்ளவர்கள் இது போன்று வேறு இடங்களில் உள்ள முகவரியை பயன்படுத்தி அதே பெயரில் செயல்பட்டிருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளும் உண்மையான குற்றவாளிகள் இவர்கள் இல்லை என கூறி வரும் நிலையில் இந்த திருவெங்கடம் போலி மரணம் இன்னும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ