சென்போன் வெடித்து சிதறியதில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரஜினி என்பவர் பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று பரமக்குடியில் இருந்து மதுரைக்கு தனது இருசக்கர வாகனத்தில் மூலம் சென்றுவிட்டு மீண்டும் பரமக்குடியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ரஜினியின், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். மேலும் அவருடம் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபரும் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
பின்னர் தகவறிந்து வந்த பரமக்குடி போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்