அரியலூர் ஜெயங்கொண்டம் தபால் அலுவலகத்தின் கதவை உடைத்து திருட்டு..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமம் அருகே உள்ள தா.பழூர் கடை வீதியில், நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று இடங்களில் மர்ம நபர்கள் திருட முயற்சி.., அதிலும் முக்கியமாக தா.பழூர் கடைவீதியில் மத்திய அரசு அலுவலகத்திற்கு சொந்தாமான தபால் அலுவலகம் இயங்கி வருகிறது.
தொடர் திருட்டு நடந்து வரும் இந்நிலையில், நேற்று இரவு அலுவலகத்தில் முகப்பு பகுதியில் உள்ள இரும்பு மற்றும் மர கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் உள்ள சுமார் 4500 ரூபாய் பணம் திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை தாபல் அலுவலக அதிகாரி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்து போலீசார்.., பணம் மட்டும் திருட்டு போனதா அல்லது வேறு ஏதாவது பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தபால் நிலையத்தில் உள்ள பணம் மட்டுமின்றி மேலும் அருகில் உள்ள இரண்டு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் திருடி விட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராவையும் உடைத்துள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து மருந்தகம் ( Medical Shop ) ஒன்றின் சிசிடிவி கேமராவையும் உடைத்து கிளினிக் உள்ள பொருட்களை திருடியுள்ளனர்.
தா.பழூர் காவல் நிலையம் அருகே உள்ள அரசு அலுவலகம் மற்றும் கடைகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டால் அப்பபகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மர்ம நபர்கள் பற்றி எதுவும் தெரியாததால் போலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post