14 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களும், 72 ஆயிரம் குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திர தனுஷ் திட்டத்தை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ” – மருத்துவத்துறை அமைச்சர் மா.சு
இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையும், செப்டம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், அக்டோபர் 9ம்தேதி தொடங்கி 15ம் தேதி வரை என 3 கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின் மூலம் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கக்குவான், ரனஜன்னி, டெட்டனஸ், இளம்பிள்ளைவாதம், காசநோய், மீசல்ஸ், டீவகை மஞ்சள் காமாலை ஆகியவையை தடுக்ககூடிய 7 வகை நோய்களுக்கும் திட்டத்தின்படி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரையும், செப்டம்பர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரையும், அக்டோபர் 9ம்தேதி தொடங்கி 15ம் தேதி வரை என 3 கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்
” தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
14 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களும், 72 ஆயிரம் குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100% தடுப்பூசி செலுத்திவிட்டதை உறுதி செய்யவே திட்டத்தின் நோக்கமாகும்.
தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா தமிழக சுகாதாரத்துறை முதலிடம் வகித்து வருகிறது. இதுவரை 2.98 லட்சம் தடுப்பூசி கர்பினி தாய்மார்களுக்கும், 6,94,084 குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
72,000 குழந்தைகள் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது குழந்தைகளின் குற்றமல்ல. தாய்மார்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தாய்மார்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர வேண்டும்.
2 ,3 நாட்களுக்குள் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்து செய்திக்குறிப்பு வெளியிடும் நிலையை மருத்துவத்துறை அதிகாரிகளும் உறுதி செய்வார்கள் என்று நம்புகிறேன்.”
Discussion about this post