திருமணம் ஆகாமல் தவிப்பவரா நீங்கள்..? இவரை வழிபடுங்கள்.. கெட்டிமேளம் நிச்சயம்..!!
நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையே என்று கவலையா, உங்கள் மகன் அல்லது மகளுக்கு வரன் தேடி வந்தாலும்.., அது தடைபட்டு விடுகிறது என்று வருத்தமா..?
இனி கவலை வேண்டாம்.. ஒருமுறை திருவடந்தை செல்லுங்கள். மாங்கல்ய வரன் கிடைக்கும்.
அதுவும் பல 90’ஸ் கிட்ஸ் இன்னும் கிட்ஸாகவே இருக்கிறோம் என்று நினைத்தால், நீங்கள் கட்டாயம் சென்று வழிபடுங்கள்.
திருமணம் என்று பேச தொடங்கியதும் பலரும் முதலில் பார்ப்பது ஜாதகம் தான். சில கிரக மாற்றங்களால் அவை தள்ளி கொண்டே போகும். அதில் ஒரு சிலருக்கு தோஷம் இருக்கும்.., ஆனால் அவர்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும். என்று சொல்லுவதில்லை.
முக்கியமாக செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், சூர்யா தோஷம், களத்திர தோஷம், புணர்பு தோஷம், மற்றும் ராகு / கேது தோஷம் இருப்பவர்கள்.
இதில் உள்ள எந்த தோஷம் கொண்டவராக இருந்தாலும், திருவிடந்தை சென்றால் திருமணம் நடக்கும்.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை எனும் பகுதியில் அமைந்துள்ளது.
இவரை நித்ய கல்யாண பெருமாள் என்று தான் அழைப்பார்கள்.
லட்சுமியை இடது தோளில் ஏந்தியப்படி
நித்ய கல்யாண பெருமாள் அமைந்து இருப்பார். இதனால் இத் திருத்தலம் “திருவிடந்தை ” என்று அழைக்கப்பட்டது.
திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் இந்த திருத்தளத்திற்கு, உங்கள் பெற்றோர் அல்லது உறவினருடன் வந்து, கோவிலுக்கு வெளியே விற்கப்படும் பூ மாலையை வாங்கி பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை செய்து தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு 9 முறை கோவிலை சுற்றி வர வேண்டும்.
பின் அந்த மாலையை எடுத்து கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இதை மட்டும் செய்தால் போதும் விரைவில் திருமணம் ஆகிவிடும்.
திருமணம் ஆன பின் கணவன், மனைவி இருவரும் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து கோவிலை சுற்றி வர வேண்டும்.
பின் அந்த மாலையை கோவிலுக்கு பின் இருக்கும் மரத்தில் மாற்றி விட வேண்டும்.
இந்த எளிய பரிகாரத்தை செய்தால்.., கெட்டிமேளம் நிச்சயம்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி

















