“No Parking” போர்டு வீட்டின் முன் வெச்சிருக்கீங்களா..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
உரிய அனுமதி பெறாமல், வீடுகளின் முன் நோ பார்க்கிங் பலகைகளை வைத்திருப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போன்ற மாநகரங்களில் வாகனங்களை சரியான பார்க்கிங்கில் பார்க் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்க, ஒருசில வீடுகளில், நோர் பார்க்கிங் என்ற பலகைகளை அவர்கள் தாங்களாகவே வைத்துக் கொள்கிறார்கள்.
உரிய அனுமதியே பெறாமல், இவர்கள் இவ்வாறு பலகைகள் வைக்கக் கூடாது என்றும், பூந்தொட்டிகளை வைக்கக் கூடாது என்றும், நந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், சென்னையில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங் ‘ போர்டுகள், தடுப்புகளை வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விதிமுறைகளை பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதளம் வழியே வெளியிடவும் காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.