நாங்க பேசுனா மத வெறி.. அமித்ஷா பேசுனா..? ஆவேசமான சீமான்..?
நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூன் 1ம் தேதி, இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.
ஒடிசாவில் அதிக செல்வாக்கு மிகுந்த தமிழராக இருக்கும் விகே பாண்டியனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதலமைச்சரும் ஆன பிஜு ஜனதா தளம்கை விமர்சிப்பதை காட்டிலும் அவருக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுபற்றி நவீன் பட்நாயக்கிடம் கேட்டதற்கு இணங்க ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் விகே பாண்டியன் இணைந்து கேபினேட் அந்தஸ்துடன் 5T தலைவர் பதவியை மேற்கொண்டார். நவீன் பட்நாயக் கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வருக்கு அடுத்தபடியாக விகே பாண்டியன் அதிக செல்வாக்கு உடையவர்.
நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக இருக்கும் விகே பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா முதல்வரின் வலது கரமாகவும், ஒடிசா அரசில் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்கும் விகே பாண்டியன் நவீன் பட்நாயக்கை குறி வைத்து பாஜக தலைவர்கள் விமர்சித்து பேசி வருவது பாஜகவிற்கு வெக்க கேடு.
பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோயிலின் வழிபாடுகள் குறித்து பிரசாரத்தில் பேசுகையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகவும், நவீன் பட்நாயக் அரசு அதை மறுப்பதாகவும் பலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
முன்னதாக, ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ஒடிசாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா..? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பேசினார்.
“இந்த பேச்சு எல்லாம் வருகிற ஏப்ரல் 19ம் தேதி வரை மட்டுமே. இப்போ தெரியுதா எங்கள் தமிழ் தேசிய அரசியல் எவ்வளவு சரியானது என்று..? அது என்ன பீகாரியா..? பகாரியா..? என நிதிஷ் குமார் பேசும்போது ஒன்றும் சொல்லாத பாஜக ..
ஒடிசாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் வி.கே.பாண்டியன் பற்றி மிகவும் ஆவேசமாக பேசி இருக்கிறார். அதை யாரும் எதுவும் கேட்கவில்லை.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் பஞ்சாபியை ஆள வேண்டும் என்றால், அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் உள்ளே விடுகிறீர்கள் என பிரதமர் மோடி பேசும்போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் சொன்னால் மட்டும் என விமர்சிக்கிறார்கள்.
பிரிவினைவாதம், இன வெறி என பேசி எங்களை கேவலப்படுத்தும் பாஜக..? ஒடிசா கலெக்டர் விகே பாண்டியன் இந்தியன் இல்லையா..? நாங்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா.. ? ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, ஒரு தமிழன் ஆளக்கூடாதா..?
எங்கள் நாட்டை 60 ஆண்டுகளாக எவர் எவரோ ஆளும்போது நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..? விகே பாண்டியன் இன்னும் ஒடிசாவில் முதல்வராக ஆளவில்லை, ஆளப் போவதாக ஒரு நிலைமை இருப்பதற்கே பாஜக இவ்வளவு கடுப்பாகிறது.
என் மண் என் மக்கள், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்தாரே, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அவர் ஏன் எதுவும் சொல்லவில்லை..? ஒரு தமிழராக அவரது நிலைப்பாடு என்ன..? பாஜாகாவின் ஒட்டுமொத்த ஆட்டத்திற்கு ஜூன் 4 முடிவு தெரிந்து விடும். என நாதக சீமான் ஆவேசமாகப் பேசினார்.
– லோகேஸ்வரி.வெ