வேக வைத்த வேர்கடலையில் இவ்வளவு நன்மைகளா.?
நாட்களிலே வேர்க்கடலை அதிக சத்துக்களை கொண்டது. மற்ற நாட்களை ஒப்பிடும் போது வேர்க்கடலை விலை மிகவும் குறைவு. ஆனால் அதன் நன்மைகள் ஏராளம். வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும்.
வேர்க்கடலையில் பச்சை வேர்கடலை, வறுத்த வேர்க்கடலை, வேகவைத்த வேர்க்கடலை என பிரிப்பர். ஆனால் வேர்கடலையில் உள்ள சத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு பெற வேண்டும் என்று நினைத்தால் வேக வைத்த வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.
அதற்கு தனி மனமும் சுவையும் உண்டு. வேர்க்கடலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். வேகவைத்த வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
1. வேகவைத்த வேர்க்கடலையில் நார்ச்சத்து நல்ல கொழுப்புக்கள் புரோட்டின் போன்றவை உள்ளது. இந்தச் சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
2. வேக வைத்த வேர்க்கடலை இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலையை உண்பதன் மூலம் இதயத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள் கிடைக்கும் .சரியான அளவில் வேர்க்கடலையை உட்கொண்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். அது இதய நோயின் அபாயத்தையும் தடுக்கும்.
3. வேர்க்கடலையில் போலேட் மற்றும் நியாசின் போன்ற வளமான சத்துக்கள் உள்ளது. இந்தச் சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இது அறிவாற்றல், நரம்பு மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும் .
4. ரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை நல்லது. வேர்க்கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கும். இதில் பசி உணர்வு குறையும். உடல் எடை குறைப்பவருக்கு டயட்டில் இருப்பவருக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத் தீனியாகும்.
5. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வளமான அளவில் உள்ளது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தையும் குறைக்க மிகவும் சிறந்தது.
6. வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும், கலோரிகளும் அதில் அதிகம் இருக்கும். ஆகையால் நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள் தினசரி உணவில் சேர்க்கும் முன் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று அளவாக உட்கொள்வது நல்லது.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..