வேர்க்கடலை இருந்தால் போதும் உங்கள் முகத்தை அழகாக்கிவிடும்..?
வேர்க்கடலை என்றாலே சுட.. வேக வைத்து சாப்பிடுவது. வறுத்து சாப்பிடுவது. எண்ணெயில் மிளகாய், வேர்க்கடலை எல்லாம் சேர்த்து வதக்கி மசாலா கடலையாக சாப்பிடுவது. எல்லோருக்கும் பிடிக்கும்.
ஆனால் வேர்க்கடலை உடலிற்கு மட்டும் அல்ல முகத்திற்கும் பயன் என்பது எத்தைனை பேருக்கு தெரியும்..? முகத்தை அழகாக வைத்துக்கொள்ளும் வேர்க்கடலை பற்றி பாப்போம்.

வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு. இதில் வைட்டமின்கள் மட்டும் அல்லாது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மற்றும் தாதுக்கள் என அனைத்தும் உள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை உடல் ஆரோக்யத்திற்கு மட்டுமின்றி முக அழகிற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது .
வேர்க்கடலையில் ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக இருப்பதால் வயதான தோற்றத்தை விரைவில் வர விடாமல் தடுக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைக்கும்.
வேர்க்கடலையில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்கிறது.

வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் இருப்பதால், முகப்பரு வராமல் தடுக்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
வேர்க்கடலையில் வைட்டமின் ஈ இருப்பதால், வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
வேர்க்கடலையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமத்தை என்றும் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

















