மும்பை கல்யாண் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வின். இவர், 2016ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். அஸ்வினியின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் அஸ்வினியின் செல்போன் கடைசியாக தானே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த அபய் என்பவரின் வீடு அமைந்துள்ள மீரா ரோடு பகுதியை காட்டியது.
போலீசார் விசாரணையில் அபய்க்கும் அஸ்வினிக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. அபய் ஏற்கனவே திருமணம் முடித்தவர். தன்னை திருமணம் செய்யும்படி அபயை அஸ்வின் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அபய், அஸ்வினியை தனது நண்பர் ராஜு பாட்டீல், குண்டன் பண்டாரி, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடத்தி சென்று கொலை செய்து உடலை கண்டம் துண்டமாக வெட்டியுள்ளனர்.
பின்னர், உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்துள்ளனர்.தொடர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்று கடலில் வீசியுள்ளனர். போலீசார் அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பன்வெல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் ராஜூ பாட்டீல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அபய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குண்டன் பண்டாரி, மகேஷ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் ஏற்கனவே, சிறையில் 7 ஆண்டுகள் இருந்ததால் அவர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டன.ர