மிகப்பெரிய ஹீரோ.. மிகப்பெரிய சம்பளம்.. அசால்டாக தூக்கி எறிந்த அனுஷ்கா…!
அனுஷ்கா ஷெட்டி:
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ரெண்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அனுஷ்கா அறிமுகமானர். அறிமுகமான பத்து வருடங்களில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தன.
மாறுபட்ட கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அனுஷ்கா தனக்கு கிடைத்த மிகபெரிய வாய்ப்பை தவரவிட்டதாகவும் அதற்கான காரணம் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, சில வருடங்களுக்கு முன்பு நடிகை அனுஷ்காவிற்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும் அந்த படத்தில் நடிக்க ரூ5 கோடி சம்பளம் தருவதாகவும் படக்குழு கூறியுள்ளதாம். ஆனால், படத்தில் நான் நடிக்கவில்லை என அனுஷ்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காரணம், அந்த சமயத்தில் நடித்தால் இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை கேட்டு மட்டுமே நடிக்கவேண்டும் என்கிற முடிவில் இருந்தாராம்.
அதன் காரணமாகவே 5 கோடி கொடுத்தும் அந்த தெலுங்கு ஹீரோக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டதாக புதிய தகவல் கசிந்துள்ளது.
-பவானி கார்த்திக்