மனித உருவில் மற்றொரு கர்ணன்..!! ராகவா லாரன்ஸ் மாற்றம்.!! அசத்தும் பாலா..!! கண்கலங்கிய மாணவி..!!
நடிகர் ராகவா லாரன்ஸ், பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது “மாற்றம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலமாக பல ஏலை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதில் பலர் மருத்துவர், வழக்கறிஞர் என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு பேசும்போது, “இரண்டு மாதம் முன் எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம் என கூறியிருந்தார். இதில் எஸ்.ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, மற்றும் KPY பாலா ஆகியோர் இந்த அறக்கட்டளையில் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் பாலா. இவர் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜீடோ விளையாட்டு வீரங்கனையான செல்லமணி நேபளாத்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள போதிய பணம் இல்லாமல் தவித்திருந்தார். இதனை அறிந்த பாலா ராகவா லரான்ஸிடம் கூறியுள்ளார்.
லாரன்ஸ் மற்றும் பாலா இணைந்து செய்த உதவி :
பாலா மற்றும் லாரன்ஸ் இணைந்து செல்ல மணியை நேபாளத்தில் நடக்கும் ஜீடோ போட்டியிற்கு அனுப்பி வைத்தனர். செல்லமணி தற்போது அந்த போட்டியில் கலந்து வெற்றி பெற்று தங்க பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.
இதனை அறிந்த நெட்டிசன்கள் லாரன்ஸ் மற்றும் பாலாவை பாரட்டி வருகிறார்கள். மேலும் அப்போட்டியில் வென்ற செல்ல மணிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா செய்த இந்த உதவி.., பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.
-பவானி கார்த்திக்