அண்ணாமலையின் அரைவேக்காடு அரசியல்..!! செல்லூர் ராஜு பேட்டி..!!
அண்ணாமலை எப்போதும் அரைவேக்காட்டு தனமாக தான் பேசுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி மாலை கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், கலைஞர் நாணயத்தை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றது., சற்று அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாக வெடிக்க தொடங்கியது..
அதாவது அண்ணாமலை கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தியதற்கு, அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதற்கு அண்ணாமலை “மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஐயாவிற்கு கும்பிடு போடுவதில் தவறில்லை. மற்றவரை போல காலில் விழுந்தே கிடப்பது தான் தவறு.” என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அண்ணாமலை எப்போதும் அரைவேக்காட்டு தனமாக தான் பேசுகிறார். அவரின் அரசியல் செயலும் அப்படி தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை மட்டுமே முடிவு எடுக்க முடியாது. பாஜக அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்க முடியும்., அதிமுகவின் மாமன், மச்சான் கூட்டணிக்கு செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..