அண்ணாமலை ஒரு காமெடி பீஸா..? ஆர்.எஸ்.பாரதியின் துணிச்சல் பேட்டி..!!
பெரியாரை மதிக்காத கட்சி திமுக என்று அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார்.., அண்ணாமலையின் விமர்சன துறையில் திமுகவின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது.., என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சில கேள்விகளை எழுப்பினார்..
சாதிவாரி கணக்கெடுப்பு பீகார் நடத்தி முடிந்துவிட்டது.., ஆனால் பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தாமல் இருக்கிறது.. இதை மாநில அரசாங்கம் செய்ய முடியாது.., பீகார் செய்திருக்கும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் ரிசல்ட் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.., ஆனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது யார்.. ?
மத்திய அரசாங்கம் தான் இதற்கு முன் வந்து அதை செய்ய வேண்டும்.., மத்திய அரசுக்கு இதை வலியுறுத்த வேண்டும்.. இந்தியா கூட்டணியின் அஜண்டாவில் இதுவும் ஒன்று அடுத்த ஆறுமாதத்திற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்,..
மோடியின் வார்த்தை என்பது திண்டுக்கல் பூட்டை போல வலிமையானது.., மோடி பொய்யே சொல்லமாட்டேன் என அண்ணாமலை.., சொல்கிறாரே.., அண்ணாமலை சொன்ன இந்த காமெடிக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரியில் இருக்கும் மக்களிடம் சென்று கேட்டு பாருங்க.., மோடி ஒரு பொய் அரசன் என்பது தெரியும்..
அண்ணாமலை இப்படியெல்லாம் காமெடி பண்ணா பாதயாத்திரைக்கு கூட்டம் வரத்தானே செய்யும்.., யார் வேண்டுமானாலும் கூட்டம் கூட்ட முடியும்.., பாஜக எப்படி கூட்டம் கூட்டுகிறது என பாஜகவே சொல்லுவார்கள்..
பெரியாரை மதிக்காத கட்சி.., திமுக தான் என அண்ணாமலை சொல்லுகிறாரே.., 1952ம் ஆண்டு கலைஞர்.., பெரியார், அண்ணா மூன்று பேரும் இணைந்துதான் இட ஒதுக்கீட்டிற்காக போராடினார்கள்.. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் தான் தலைவராக வேண்டுமென பெரியார் சொன்னார்.., இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியுமா..?
அண்ணாமலைக்கு தெரிந்து எல்லாம்.., வாயுக்கு வந்தபடி உளறுவது.., ஏதாவது பத்திரிக்கையில் தன்னை பற்றி வரவேண்டும் என்பதற்காக காமெடி செய்து விட்டு மன்னிப்பு கேட்பது இதுமட்டும் தான் அண்ணாமலைக்கு தெரியும்.. அரசியலின் ஆநா.. ஆவன்னாவே அண்ணாமலைக்கு தெரியாது..
அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களுக்கு திமுக பதிலடி கொடுக்காமல் இருப்பது ஏன் தெரியுமா..? அண்ணாமலையை நாங்கள் முழுவதுமாக புறக்கணித்து விட்டோம்.., ஒருவேளை அவர் புத்திசாலி தனமான வாதங்களை முன் வைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்..
“நூற்றுநாகணக்கான படங்களை ரெட் ஜெயின்ட் மூவிஸ்” வெளியிட்டுள்ளது.., ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்பது ஒரு மிகப்பெரிய நிறுவனம்.., 2 ஆண்டில் மட்டும் 100 படங்களை வெளியிட்டுள்ளது அதை தெரிந்துகொண்டே ஜெயக்குமார் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.. தொழிலை அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்..
அ.தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே என சொல்லி தி.மு.க-வின் ஐ.டி விங் குளிர்காய்கிறது என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டுகிறாரே..? அப்படி குளிர்காய வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு கிடையாது என செய்தியாளர்கள் முன் பேட்டி அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..