இனி நீட் தேர்வில் 0 எடுத்தா டாக்டர் ஆகிடலாம்..? கலாய்த்து தள்ளிய உதயநிதி..
மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணோ அல்லது மதிப்பெண் எடுத்தாலும் கூட மருத்துவ சீட் உறுதி. என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே சில கட்சி தலைவர்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்..
சென்னை கலைவாணர் அரங்கில் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.., பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., “இந்த நீட் ஒழிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தை” திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி இருந்தாலும் அதை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும்.,
இந்த நீட் தேர்வை ஒரே அடியாக ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து தான் ஒவ்வொருவரும் கையழுத்திட்டு வருகின்றனர்.., ஒரு முட்டையை கையில் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் PG நீட் சேர 0 எடுத்தால் போதுமா..?
ஒரு குட்டி கதை ஒன்னு சொல்லுறன்.., ஒருமுறை சாவியை பார்த்து சுத்தியல் கேட்டு இருக்கு.., உன்னை விட நான் ரொம்ப பலசாலி ஆனா நீ மட்டும் எப்படி அந்த பூட்டை திறக்குற.., என்னாலே உடைக்க மட்டும் தான் முடியுது நீ எப்படி திறக்குற அப்படினு கேட்டுச்சாம்..
அதுக்கு அந்த சாவி சொல்லுச்சு.., நீ என்ன விட பலசாலி தான்.., ஆனா நீ பூட்டோட தலையில ஓங்கி அடிக்குற.., நான் அதோட இதயத்துல போய் திறக்குறன்.., அதுதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம் அப்படினு சொல்லுச்சாம்..
அதுமாதிரி பாஜக என்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி அடிச்சாலும் அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்கவே முடியாது.., நீட் தேர்வை 0 ஆக்குவது முக்கியமல்ல நீட்டையே ஒரே அடியாக ஒழித்து மாணவர்களின் உயிரை பாதுக்காப்பதே தர்மம்.., என பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..