பாலிவுட்டில் கலக்கும் அனிரூத்..! வைப் பன்னும் ஃபேர் பாடல்..!
பாலிவுட் நடிகரான நந்தமூரி தாரக ராமாராவ் இவரை பெரும்பாலும் ஜூனியர் என்டிஆர், என்று தான் அழைக்கின்றனர். திரைப்பட நடிகர், குச்சிப்புடி நடன கலைஞர், மற்றும் பின்னணி பாடகர் என அனைத்தும் தெரிந்தவர்.
இவர் நடித்த இராமாயணம் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். பின்னர், இவர் நின்னு சூடாலனி திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் இசையமைப்பளராக பணியாற்றினார். அந்த படத்தில் இசையமைத்த வொய் திஸ் கொலவெறி பாடல் செம ஹிட் ஆனது. ஆரம்பத்தில் தனுஷ் திரைப்படங்களுக்கு மட்டும் இசையமைத்த இவர் அதன் பின்னர் பல முன்னனி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகரான என்டிஆர் நடித்துள்ள திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் “தேவாரா” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
அனிரூத் கம்போஸ் செய்து பாடியுள்ள Fear Song என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் ஐந்து மொழிகளிலும் வெளியாகியது.
இந்த பாடலுக்கு லியோ படத்திற்கு பாடல் எழுதிய விஷ்ணு எடாவன் இந்த பாடலை எழுதி இருக்கிறார். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
– பவானி கார்த்திக்