மறு ஜென்மம் அளித்த அங்காள அம்மன்..!! ஊரும் உறவும்-8
அங்காளம்மன் என்றாலே அவரை வணங்காத மற்றும் விரும்பாத பக்கதர்கள் இருக்க முடியாது.
அனைவரும் நம்பிக்கையோடு வணக்கும் நம் அங்காள அம்மனின் சிறப்பை பற்றி பார்ப்போம்.
ஒரு உண்மை கதை: ஜனவரி 27ம் தேதி 2023-ம் ஆண்டு எனக்கு எதிர்பாரத ஒரு விபத்து, மரண படுகையில் படுத்த தருணம், விபத்து நேர்ந்த உடன் அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தார்கள், ஆனால் நான் அதற்குள் நான் சுய நினைவை இழந்து விட்டேன், மரணம் என்னை நெருங்கிய தருணம்.ஆன்மீக
மருத்துவர்களும் நான் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறி, சிகிச்சைக்கு முன் பெற்றோரிடம் இருந்து கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள். சிகிச்சைக்கு பின்னும் நான் கண் திறக்கவில்லை, உயிர் பிழைக்கவே மாட்டேன் என்று அனைவரும் முடிவு செய்து விட்டார்கள்.
பின் என் அம்மா, அங்காள அம்மன் கோவிலுக்கு சென்று.., எனக்காக வேண்டிக் கொண்டு அங்கிருக்கும் குங்குமத்தை எடுத்து வந்து என் நெற்றியில் இட்டார். நெற்றியில் வைத்த சில நொடியிலேயே என் இதயதுடிப்பு மீண்டும் இயங்க தொடங்கி விட்டது.
உறவினர் மட்டுமல்லாமல் மருத்துவர்களும் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள், மீண்டும் மேல் சிகிச்சை கொடுக்கப் பட்டது. மறு நாளே நான் கண் விழித்து விட்டேன்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அங்காளம்மன் கோவிலுக்கு சென்று அவர்களை தரிசனம் செய்வது வழக்கம், அப்படி நான் சென்று வணங்கியதால் தான், நான் மறு ஜென்மம் எடுத்தேன்.
எந்த தெய்வமும் நம்மிடம் இருந்து பணம், நகை எதிர் பார்க்கவில்லை, முழு மனதோடும், நம்பிக்கையோடும் இரு கைகளை கூப்பி வணங்கினால் போதும்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..!!
-வெ.லோகேஸ்வரி