அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் மாற்றம்..!! மத்திய அரசு அதிரடி முடிவு…!!
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் மாற்றப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது ஒன்றிய அரசு மாற்றி வருகிறது. இந்த நிலையில் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர், ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படுகிறது என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மதிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த பெயர் மாற்றம் முடிவு இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். காலனி முத்திரையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக போர்ட் பிளேயர் என்ற பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம் என்றும் முந்தைய பெயருக்கு ஒரு காலனித்துவம் மரபு இருந்ததால் ஸ்ரீ விஜயபுரம் என்ற சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியை குறிக்கும் வகையில் தனித்துவமான பெயராக மாற்றப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..