நீட் தேர்வு குறித்து அன்புமணி ராமதாஸ் செய்த செயல்..!
கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வின் தற்கொலை எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து கொண்டே வருகிறது. உயிரை காப்பாற்றும் மருத்துவ படிப்பிற்காக மாணவர்கள் சேர முடியாமல் போகும் நிலையில் அவர்கள் உயிரை விடுவது வேதனை அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தற்கொலைகள் நடந்த பின் அதற்காக வேதனை படுவதை விட மீண்டும் அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளாமல் தடுப்பதே மிக சிறந்தது. குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அமைத்து தர வேண்டியது பெற்றோரின் கடமை மட்டுமல்ல.., அது அரசியல் சார்ந்ததும் கூட மாணவர்களுக்கு கல்வியால் எதாவது பிரச்சனை ஏற்பட்டால்.., அதை சரி செய்து தரவேண்டியது நம் அனைவரின் கடமை.
மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சியில் புகழ்பெற்ற ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் தான் அதிகமாக தற்கொலை நிகழ்கிறது. அதை தடுப்பதற்காக பாமக ஆகிய நாங்கள் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். என அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..