நடந்து சென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்த நபரை தாக்கிய பெண்..
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற பெண்ணை ஆபாசமாக சித்தரித்த நபரை அப்பெண் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே சுற்றுலா வந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த ஒருவர் அப்பெண்னை ஆபாச வார்த்தைகளால் சித்தரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் அந்த நபரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
