விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!! பரிதாபமாக உயிரிழந்த அண்ணன் தங்கை..!!
நெமிலி அடுத்த மூலப்பட்டில் மீன் குட்டையில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை நீரில் மூழ்கி பரிதாப பலிகிராமமே சோகத்தில் மூழ்கியது நெமிலி அடுத்த மூலப்பட்டில் மீன் குட்டையில் குளிக்க சென்ற அண்ணன், தங்கை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மூத்த மகன் தினேஷ் (11 ), அவனது தங்கை சுப்ரியா (10) ஆகியோர் வீட்டின் அருகில் உள்ள மீன் குட்டையில் குளிக்க சென்றனர்.
தாய் புவனேஸ்வரி கம்பெனிக்கு வேலைக்கு சென்று இருந்த நிலையில் தந்தை பரமசிவன் மதியம் 2 மணி அளவில் வீட்டில் குழந்தைகள் இல்லையே என்று அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகிலுள்ள மீன் குட்டையில் அவரது குழந்தைகளின் துணிகள், செருப்பு ஆகியவை குட்டைக்கு மேலே கிடந்தது. சந்தேகத்தின் பேரில் குட்டையில் இறங்கி தேடியதில் குழந்தை தினேஷ் இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்தது தெரியவந்தது.
மேலும் குட்டையின் இன்னொரு பகுதியில் தேடியதில் சுப்ரியாவும் இறந்து கிடந்து தெரிந்தது. இறந்த தினேஷ் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பும், சுப்ரியா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ம் வகுப்பும் படித்து வந்தனர். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அங்கு சென்று தினேஷ் மற்றும் சுப்ரியா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விடுமுறை நாளில் மீன் குட்டையில் குளிக்க சென்ற அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நெமிலி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..